அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.முஷாரப், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை வாபஸ் பெற்று, அதற்கு பதிலாக அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், தான் சுதந்திரமாக இருப்பேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், ஜவுளி கைத்தொழில் மற்றும் உள்ளூர் உற்பத்திகள் மேம்பாட்டுக்கான புதிய இராஜாங்க அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) பாராளுமன்ற உறுப்பினர் இன்று உலக வர்த்தக மையத்தில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
24 புதிய இராஜாங்க அமைச்சர்கள் அடங்கிய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள பட்டியலில் எம்பி முஷாரப்பின் பெயர் இடம்பெறவில்லை.
அவரது நியமனம் குறித்து ஜனாதிபதி அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. (யாழ் நியூஸ்)