ரோஜா ஆப்பிள் பழத்தில் (ஜம்பு) மூச்சுத் திணறி 8 வயது சிறுமி நேற்று (23) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் உயிரிழந்த சிறுமி மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகளாவார்.
வாரியபொல ஹம்மாலிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தாவை பார்க்க தனது தாயுடன் வந்திருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பல குழந்தைகளுடன் முற்றத்தில் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தையின் தொண்டையில் ஜம்பு பழம் சிக்கியதாக குழந்தையின் தாத்தா கூறினார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)