பிரதமர் அடங்கிய 42 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் அடங்கிய 42 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!


தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் குறித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 8ஆம் திகதி மன்றில் ஆஜராகுவதற்காக நோட்டீஸ் அனுப்புமாறு, உயர்நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.


குறித்த மனுக்கள், நீதியரசர்களான காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உணவு, எரிவாயு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர், அமைச்சரவை மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் மனுவில் கோரியுள்ளனர்.


அமைச்சரவை அமைச்சர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சு உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 42 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.