தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 23.3 கிலோமீற்றர் களுத்துறை பிரதேசத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான வாகனங்களில் சொகுசு கார்கள், வேன்கள் மற்றும் லொறிகள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக கொழும்பு செல்லும் வீதியில் பல கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், சில மணித்தியாலங்களில் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து வழமைக்குத் திரும்பியதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னால் பயணித்த வேன் ஒன்று பிரேக் போட்டதாலும், பின்னால் வந்த மற்ற வாகனங்களும் அவ்வாறே பிரேக் போட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)