உகாண்டாவில் உள்ள செரினிட்டி குரூப் எனும் நிறுவனத்தில் 10 பில்லியன் டொலர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், பல்வேறு தரப்பினர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் தவறாக வழிநடத்தப்பட்ட குழுவினால் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து உகாண்டா மற்றும் இலங்கை தனியார் வங்கிக் கடன்களுடன் படிப்படியாக விரிவடைந்து வருவது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரியாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)