மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்குவதை செயல்படுத்தும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, கூட்டு ஆதனங்களின் பெறுமதி 75,000 டொலர்களுக்கு மேல் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கும் நீண்ட கால வதிவிட விசா வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது