நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயல் தேயிலை தோட்டத்தின் கீழ்பகுதியை சேர்ந்த பழனியாண்டி முருகேஷ் (44) என்பவர் தோட்ட தேயிலை தோட்டத்தில் உள்ள 100 அடி உயர சப்பமரத்தில் ஏறி சிங்க கொடியை ஏந்தி போராட்டத்தை ஆரம்பித்தார்.
வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை ஆளக்கூடியவர்களுக்கே தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும் மரத்தில் ஏறி பிரச்சாரம் செய்யும் பழனியாண்டி முருகேஷ் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக தோட்டத்தொழிலாளர்கள் கூட்டம் மரத்தின் அடிவாரத்தில் நிற்கிறது.
பாதுகாப்பு படையினர் தன்னை கீழே இறக்க முயன்றால் மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என பழனியாண்டி முருகேஷ் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)