கெஸ்பேவயில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உரிமையாளருக்கும் நுகர்வோர் பலருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல மணிநேரம் வரிசையில் நின்றிருந்த நுகர்வோர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் தலையிட்டதால், அந்த நபருக்கும் பல நுகர்வோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் பின்னர் கிளர்ச்சியடைந்த நுகர்வோர் பலரால் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார், மோதலை கட்டுப்படுத்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதேவேளை, இன்றும் நாட்டின் பல பிரதேசங்களில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்து நின்றுள்ளனர்.
தேவையான எரிபொருளைப் பெறுவதற்காக பல நுகர்வோர் எரிபொருள் கேன்களுடன் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிந்தது.
பொதுமக்களுக்கு கேன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருளை வழங்குவதை தவிர்க்குமாறு அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் மக்கள் எரிபொருள் கேன்களுடன் காணப்படுகின்றனர். (யாழ் நியூஸ்)