நேற்றைய தினம் (22) சுமார் 200 எரிவாயு சிலிண்டர்கள் அரச இராஜாங்க அமைச்சர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தி நேற்று சமையல் எரிவாயு வரிசையில் நின்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலி, ரத்கம பிரதேசத்தில் எரிவாயு வரிசையில் நின்ற மக்களினால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் அந்த பகுதிக்கு 2,500 எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த வாரம் 500 சிலிண்டர்கள் மட்டுமே வழங்க முடியும் என்றும் அங்கிருந்த பிரதிநிதி ஒருவர் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆனால், பொலிசாரின் தலையிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. (யாழ் நியூஸ்)