விமல் வீரவன்ச உதய கம்மன்பில போன்றவர்களின் இழப்பு அரசாங்கத்திற்கு இழப்பு என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு அவர்கள் பெரும் தியாகங்களை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தமது இரு கட்சிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்குள் முழுமையாக வளர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசை விட்டு விலகி தனித்து போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றார்.
கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)