சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார பின்னடைவு, நாணய கையிருப்பு மற்றும் பணவீக்கம் என்பனவற்றை நிவர்த்திக்கும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்கள பணிப்பாளர் சங்யொங் ரீ இணை நிதி அமைச்சர், திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்று சந்தித்துள்ளனர்.
இலங்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாணய கையிருப்பினை அதிகரித்தல் மற்றும் நிலையான பாதையில் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்பன தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.