கடந்த 6 வாரங்களாக இலங்கையில் சுற்றுலா நிமிர்த்தம் வருகை தந்த புதிய யூடியூபர் 'Go With Ali' எனப்படும் அலி நாட்டை விட்டுவெளியேறுவதாக தெரிவித்து காணொளி ஒன்றை இன்று பதிவிட்டு இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதற்கான காரணத்தை வெளியிட்ட அவர், இலங்கையில் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வதையும் நாட்டில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியையும் சுட்டிக்காட்டினார்.
இவர் ஈராக் நாட்டை பிறப்பிடமாகவும் தற்போது இங்கிலாந்தில் வசித்துவருபவரும் ஆவார். மேலும் இவர் மிக குறுகிய காலத்தில் அதிகமான இலங்கை மக்களின் மனதை வென்ற ஒரு யூடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)