இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) 18,000 மில்லியனுக்கும் அதிகமான செயற்பாட்டு நட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அதன் அனைத்து ஊழியர்களுக்கும் அடுத்த மாதம் போனஸ் வழங்க தீர்மானித்துள்ளது.
இந்த வாரம் கூடிய பணிப்பாளர் சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டும் 5200 ஊழியர்களுக்கு மும்மடங்கு போனஸ் வழங்க கூட்டுத்தாபனம் அதற்காக ரூ.1560 மில்லியன் செலவிட்டுள்ளது.
மேலும், கூடுதல் நேர ஊதியமாக மாதாந்தம் ரூ.250 மில்லியன் முதல் ரூ.300 மில்லியன் வரை கூட்டுத்தாபனம் செலவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)