லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் இன்று (25) நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை பெற்றோல்களின் விற்பனை விலையை அதிகரித்துள்ளது.
அதன்படி, பெற்றோல் லீற்றர் ஒன்றின் விற்பனை விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என தெரிவித்துள்ளது.இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 303 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 332 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)