வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக 20 ரூபா ஊக்கத்தொகை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, அவர்கள் பணம் அனுப்புவதற்கு அதிக சலுகைகளும் கிடைக்கும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பணம் அனுப்பியதற்காக செலுத்தப்பட்ட ரூ.8 ஊக்கத்தொகை மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை மாற்றுவதற்கான 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை இன்று முதல் இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார். (யாழ் நியூஸ்)