இலங்கையில் 24 காரட் தங்க நாணயத்தின் விலை ரூ. 160,000 ஆக பதிவாகியது.
தங்க வியாபாரிகள் கூறுகையில், இன்று 24 காரட் தங்க நாணயத்தின் விலை ரூ. 170,000 ஆக விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.
அதேநேரம் 22 காரட் தங்க நாணயத்தின் விலை ரூ. 155,700 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும், நாடளாவிய ரீதியில் பல நகைக் கடைகளில் தங்கம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)