ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துப்படி அமைச்சரவையை குறைப்பதற்கு முன்னுதாரணமாக இருந்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,
"முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முன்வந்தார்.
அப்படியானால் நான் பதவி விலகத் தயார். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முன்மாதிரியாக இருங்கள். மொட்டில் இருந்து ஒரு உதாரணம் தருகிறேன்." என்றார். (யாழ் நியூஸ்)