பாராளுமன்ற உறுப்பினர்களின் சிற்றுண்டிச்சாலையில் பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதன் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், உணவகத்தில் இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் உணவு வழங்கல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் நாம் வினவியபோது, வழங்குநர்கள் சுமார் ஒரு மாதமாக பாராளுமன்றத்திற்கு பாலை வழங்கவில்லை என்று கூறினார்.
மில்கோ நிறுவனத்திற்கு பலமுறை அறிவிப்பு விடுத்தும் போதிய பால் வழங்கவில்லை என்றார்.
மேலும், சில போத்தல்களில் அடைக்கப்பட்ட பானங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பாராளுமன்ற உணவு வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில உணவுப் பொருட்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். (யாழ் நியூஸ்)