பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 17 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய பேருந்து கட்டணங்கள் அடங்கிய பட்டியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.