நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அதேபோல், P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணிநேர மின் வெட்டு அமலுப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.