ஒரு கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் விலையை ரூ. 1345 இல் இருந்து ரூ. 1945 இற்கு அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை ரூ. 540 இல் இருந்து ரு. 800 இற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மற்றும் 400 கிராம் பால் மா பொதிகளின் விலை முறையே ரூ. 600 மற்றும் ரூ. 260 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்களில் இருந்து 5.30 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் பெறுமதியானது ரூ 202 இல் இருந்து ரூ. 280 வரை அதிகரித்தமையும் பால் மா விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)