மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார சவால்களுக்கு பதிலளிக்கும் பலம் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பொய்களை கண்டு மனம் தளராமல் நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக தனது அனைத்து முக்கிய செயற்பாடுகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய வங்கியின் ஆளுநரை நீக்கும் திட்டம் இருப்பதாக சில பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)