சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், புதிய பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கும் நிதியமைச்சர் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியினால் சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த சர்வ கட்சி மாநாடு ஆரம்பமாகியிருந்தது.