நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கட்சிக்குள் ஏற்கெனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அதன் நிர்வாகம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமை, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பாராளுமன்றத்துக்கு தெரிவிக்காமை மற்றும் பதிலளிக்காமை போன்ற காரணங்களை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கட்சி முகாமைத்துவக் குழுவும் கலந்துரையாடி உடனடி நடவடிக்கை எடுப்பதாக அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.