இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டுக்கு பின்னால் சதி இருப்பதாக சந்தேகிப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மார்ச் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு இடம்பெறாது என ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், இதுவரையில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவது சிக்கலுக்குரியது. அப்படியானால், ஏன் இன்னும் மின்வெட்டு தொடர்கிறது? என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
சாத்தியமான சதித்திட்டம் குறித்து சந்தேகம் வெளியிட்ட அமைச்சர், நாசவேலை முயற்சிகள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.