பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவில் குறைவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனியார் வாகனங்களை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டு ரூபாயை மிதக்க விடுகிறார்கள். அந்த செலவுகளை அவர்கள் மட்டுமே ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருளால் அரசாங்கம் நஷ்டமடைந்து வருவதாகவும், அதனைத் தவிர்க்க இந்த விலை உயர்வு நடந்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)