தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறைகளை பற்றுச்சீட்டுடன் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
பயன்பாட்டு பில்களை அச்சிட காகித தட்டுப்பாடு காரணமாக டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை நீர் வாரியம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அச்சடிக்கும் தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மேலதிக பொது முகாமையாளர் (பில்லிங்) பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பயன்பாட்டு பற்றுச்சீட்டினை அச்சிடுவதற்கான காகிதங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.
இதன் விளைவாக, நுகர்வோர் தங்கள் பற்றுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க மாற்று முறைகளை அறிமுகப்படுத்த நீர் வாரியம் பரிசீலித்து வருவதாக பத்மநாத கூறினார்.
இதேவேளை, 06 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான நிலுவை பணத்தினை தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதுபோன்ற நிலுவைத் தொகைகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலதிக பொது முகாமையாளர் (பில்லிங்) பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் கிட்டத்தட்ட ரூ. 7.5 பில்லியன் இன்னும் நுகர்வோரால் கட்டப்பட்டவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வாரியம் தனது கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறிய திரு. பத்மநாத, விலை மாற்றத்தை விதிக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)