சவூதி எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சவூதி எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!!


ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.  


இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசாங்கத்திற்கு சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது.


இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவூதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. 


இந்நிலையில், சவூதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று இரவு (25) தாக்குதல் நடத்தியுள்ளனர்.


ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகளில் தீ பற்றி எரிந்து சாம்பலாகின.


தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.  


தாக்குதல் நடைபெற்ற பகுதி அருகே சர்வதேச கார் போட்டிகளில் முதன்மையான பார்முலா 1 கார் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தால் பார்முலா 1 கார் போட்டி நடைபெற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.