ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 149 நாடுகளில் இலங்கை 129ஆவது இடத்தில் இருந்தது.
இதன்படி, ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியற்ற நாடாகக் குறிப்பிட்டுள்ளது. பட்டியலில் 121ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு கீழேயும் இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது.
நேபாளம் 84ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 94ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 121ஆவது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் ஆசிய நாடுகள் எதுவும் இல்லை. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னர் இந்த பட்டியல் முடிக்கப்பட்டது.
உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், அதன் 10ஆவது ஆண்டில், மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பற்றிய சொந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும், பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளின் அடிப்படையிலும் உள்ளது.