காகிதங்கள் தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
விநியோகஸ்தர்களிடம் காகிதங்கள் இல்லாததால், கல்வியாண்டுகளுக்கான பாட புத்தகங்களை அச்சிட முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
பாடசாலை பாடப் புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் காகிதம் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் டன் காகிதத்தின் விலை ரூ. 200,000 இலிருந்து அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதே கூட்டுத்தாபனத்தின் முக்கிய வருமானம் என்றும், அதை இழந்தால் நிறுவனத்துக்கு சுமார் 1,200 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் அரச நிறுவனங்களுக்கு ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு லொத்தர்கள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாட்டால் காகித இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக காகித இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)