இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
நேற்றைய தினம் 1988.18 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 0.52 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு 154,500 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 146,275 ரூபாவாக காணப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு நகை கடை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.