சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்த டேவிட் பென்னட் இறக்கும் போது அவருக்கு வயது 57.
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அவரது உடல்நிலை சில நாட்களாக மோசமடைந்து வண்ணம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)