பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, 6, 7, 8ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகள் பாடசாலை அளவில் நடத்தப்பட உள்ளன.
இதேவேளை, தரம் 09, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
காகிதத்தாள் தட்டுப்பாடு காரணமாக இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதத்தாள் தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாண பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)