ரமழான் மாதம் இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் விசேட விடுமுறை நேரங்களை உள்ளடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்களுக்காக குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சினால் மார்ச் 28 திகதியிடப்பட்ட, EST-6/03/LEA/3125 எனும் குறித்த சுற்றறிக்கையே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, தொழுகைகள், மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக நாளாந்தம் குறிப்பிட்ட நேரத்தை வழங்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரமழான் பெருநாளுக்கு 14 நாட்களுக்கு முன்பாக தகைமையுடைய நபர்களுக்கு பெருநாள் முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும். https://chat.whatsapp.com/BCPn7PEG1wV8gaHKy4aJJ1