இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஜெஹான் முபாரக் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின் பேரில், இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, அவிஷ்க குணவர்தன பயிற்றுவிக்கும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஜெஹான் முபாரக் நியமிக்கப்படவுள்ளார்.
மேற்கிந்தித தீவுகளில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பின்னர் அவிஷ்க குணவர்தனவின் ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)