மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த 71 வயது முதியவர் வெப்பக் களைப்பு காரணமாக தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டியில் இன்று (19) பதிவாகியுள்ளது.
மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
வத்தேகம – உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (யாழ் நியூஸ்)