தம்மிடம் டீசல் கையிருப்பு இல்லாததால் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் டீசல் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என சிபெட்கோ பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
"37,500 மெட்ரிக் டன் டீசலை ஏற்றி வந்த ஒரு கப்பலில் இருந்து திட்டமிட்டபடி இன்று இறக்க முடியவில்லை. எனவே, மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் டீசல் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களை CEYPETCO கேட்டுக்கொள்கிறது, எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு டீசல் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும்" என சிபெட்கோ அறிவித்துள்ளது..
எனினும், பெட்ரோல் விநியோகம் வழக்கம் போல் தட்டுப்பாடு இன்றி நடைபெறும். (யாழ் நியூஸ்)