பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான 13 யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்று மல்வத்து பீட மஹாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீட மஹாநாயக்கர் வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
நிலையான அபிவிருத்திக்கான திட்டத்தை வகுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்களைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுவதன் முக்கியத்துவத்தை பீடாதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.