நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரஞ்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முதலாவது வழக்கில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 2021 ஜனவரியில் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .
மனிதாபிமான அடிப்படையில் ராமநாயக்கவை விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருட்டு, கொலை அல்லது கற்பழிப்பு குற்றங்களுக்காக ரஞ்சன் சிறையில் அடைக்கப்படவில்லை என்றும் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளுக்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். (யாழ் நியூஸ்)