இலங்கை மத்திய வங்கி நேற்று (08) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ஆக அதிகரித்தது.
இதன் விளைவாக இன்று (09) முதல் மத்திய கிழக்கு நாடுகளின் நாணய மாற்று விகிதங்களும் மாற்றமடைந்தன.
அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஒன்றின் விற்பனை விலை ரூ. 55.01 இலிருந்து ரூ. 62.48 ஆகவும், பஹ்ரைன் தினார் ரூ. 536.00 இலிருந்து ரூ. 608.69 ஆகவும், கட்டார் ரியால் ரூ. 55.30இல் இருந்து ரூ. 62.96 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேலும் குவைத் தினார் ஒன்றின் விற்பனை விலை ரூ. 665.21ல் இருந்து ரூ. 755.43 ஆகவும், ஓமானி ரியால் ரூ. 524.90ல் இருந்து ரூ. 596.09 ஆகவும், சவூதி அரேபிய ரியால் ஒன்றின் விலை ரூ. 53.86 இல் இருந்து ரூ. 61.16 வரையும் அதிகரித்துள்ளது.
அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு ஈடாக ரூபாயின் மதிப்பு கணிசமான சதவீதம் உயரும் என்பது தெளிவாகிறது. (யாழ் நியூஸ்)