நுவரெலியா பிரதேசத்தில் இயங்கும் தனியார் பஸ்களுக்கு உரிய நடைமுறைக்கு அமைய டீசல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்து நுவரெலியா பிரதேசத்தின் பல வீதிகளில் இயங்கும் தனியார் பஸ் உரிமையாளர்கள் நேற்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலியாவில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தனியார் பஸ்களுக்கு டீசல் எரிபொருள் வழங்கப்படாமையால் நேற்று (25) பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா பிரதேச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா, சாந்திபுர, மிபிலிமான, ஹவா எலியா, பொரலந்த, ராகலை மற்றும் நானுஓயா மற்றும் பட்டிப்பொல ஆகிய பகுதிகளில் சேவையில் ஈடுபடும் சுமார் 150 தனியார் பேருந்துகள் 25ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
அந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படாமை தொடர்பில் நாம் வினவிய போது, நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திரு.பிரேமலால், பஸ் உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வந்து பிரச்சினைகளை பேசுமாறு பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)