பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய அனைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது வாகனங்களில் இருந்த விசேட 'பாராளுமன்ற உறுப்பினர்' எனும் அடையாளங்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பலகைகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக மட்டுமே அடையாளம் காணும் வசதிக்காக பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த நாட்களில் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமடைந்து வருவதால் தமது பாதுகாப்பு காரணமாக இவ்வாறு அடையாளங்களை அகற்றியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)