முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று (20) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாயக்க வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராமநாயக்க தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், உச்ச நீதிமன்றம் 2021 ஜனவரியில் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)