இவ்வாறு சென்றால் நாடு முழுமையாக விற்கப்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டையும் மக்களையும் முதன்மையாக நினைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
என்ன செய்தாலும் எமக்கு ஒரு நாடு வேண்டும் என்றும் ஆனால் இன்று மக்கள் வாழக்கூட முடியாத நிலை உருவாகியுள்ளது என்றார்.
மக்கள் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில், வெளிப்படைத்தன்மை இன்றி அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளை மக்கள் நிராகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அவரைச் சந்தித்து ‘මුළු රටම හරිමගට’ என்ற தேசிய விஞ்ஞாபனத்தை அவரிடம் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)