இலங்கை மின்சார சபையினால் நாளை (10) மின்சாரம் துண்டிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, கீழ்கண்டவாறு மின் இணைப்பு துண்டிக்கப்படும்.
A,B,C,D,E,F,G,H,I,J ,வலயங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுமார் 2 மணி 30 நிமிடங்கள் மற்றும் மாலை 6.00 முதல் 11.00 மணி வரை ஒரு மணி 15 நிமிடங்கள் மின்தடை ஏற்படும்
அதேநேரம் , P, Q, R, S, T, U, V, W வலயங்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை இரண்டு மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரமும் மின்தடை ஏற்படும். (யாழ் நியூஸ்)