இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
அனைத்துக் கட்சி மாநாட்டைப் புறக்கணித்த அனைத்துக் கட்சிகளையும் அடுத்த அமர்வில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
"ஏப்ரல் புத்தாண்டு நெருங்கி வருவதால், அடுத்த சில நாட்களில் எரிபொருள் மற்றும் உணவு தீர்ந்துவிடும் என்று பொய்யான அச்சத்தை உருவாக்க வேண்டாம்," என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை அரசாங்கம் உருவாக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சில பிரச்சினைகளுக்கு அரசாங்கமே காரணம் எனக் கூறி சிலர் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் பாரிய அசௌகரியங்களை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இயன்றளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குழுமங்களில் இணைவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளவும். https://chat.whatsapp.com/H57lBYDLpJ5Lq7gmNXcqNU