தற்போதைய மின் நெருக்கடி 2026 வரை தொடரும் என மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சௌம்ய குமாரவடு தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டிற்கு தேவையான மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாமையினாலும், மின் பொறியியலாளர் சங்கம் கடந்த அரசாங்கத்திற்கு வழங்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த தவறியமையினாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பூர்த்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த இலக்கை அடைய, அத்தகைய மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது மூன்று டெண்டர்கள் கோரப்பட வேண்டும். 90, 50 மற்றும் 150 மெகாவாட்களுக்கான டெண்டர்கள் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டு, இந்த மின் நிலையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், 150 மெகாவாட் சூரிய மின் நிலையங்கள் மற்றும் 40 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான டெண்டர்களை அழைப்பதற்கு ஒப்புதல் கோரி ஆகஸ்ட் 2020 இல் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் அது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் மட்டுமே நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதால், குறைந்த செலவில் எல்என்ஜி மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது அவசியம். அவற்றை நிர்மாணிப்பதற்கு சுமார் ஐந்து முதல் பத்து வருடங்கள் ஆகும் எனவும், தற்போதைய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்தால் இன்னும் சில வருடங்களில் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் எனவும் குமாரவடு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)