எரிவாயு விலை தொடர்ந்தும் தவிர்க்கமுடியாத அளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"குறிப்பாக லிட்ரோ இந்த எரிவாயு தயாரிப்புகளில் ஒரு லட்சத்தை சந்தைக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இம்மாதம் 4 முதல் 5 ஆம் திகதிக்குள் பற்றாக்குறை நீக்கப்படும் என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலை மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் எனவும் நம்புகின்றோம்" என்றார். (யாழ் நியூஸ்)