தன்னை கேஸ் சிலிண்டரால் சிலர் தாக்கியதாகக் கூறுப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பயணித்த வாகனத்தின் மீது சிலிண்டரைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதனை இராஜாங்க அமைச்சர் மறுத்துள்ளார்.
எனது வாகனத்தின் மீது சிலிண்டரைக் கொண்டு தாக்கியதாக சமூகவலைத்தளங்களில் பதிவிடுகிறார்கள். அது பொய். அவ்வாறு தாக்கியிருந்தால் எனது வாகனம் சேதமடைந்திருக்கும். குறைந்தது இவ்வாறு தாக்கும்போது கூட்டத்தில் இருந்த எவராவது வீடியோ எடுத்திருப்பார்கள். எனவே தான் தாக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.