உணவுப் பொதி ஒன்றின் விலை 20 அல்லது 30 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வினவியபோது, பொருட்களின் விலையேற்றம் காரணமாகவே இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கொத்து உள்ளிட்ட துரித உணவுப் பொருட்களின் விலைகள் 5 அல்லது 10 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)